Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் பண்டிகைகளை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்

தமிழகத்தில் பண்டிகைகளை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்

By: vaithegi Fri, 30 Sept 2022 7:04:41 PM

தமிழகத்தில் பண்டிகைகளை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை: சிறப்பு ரயில்கள் இயக்கம் .... தமிழகத்தில் பண்டிகை மற்றும் விழா கால விடுமுறைகளை முன்னிட்டு மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு அதிகமாக பயணம் செய்வர். இதனால் பேருந்து மற்றும் ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படும்.

இதையடுத்து இந்நிலையில் பயணிகளுக்கு உதவும் வகையிலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் கூடுதலாக ரயில்கள், பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தின் தென் மாவட்டங்களில் எஸ்வந்த்பூர் – திருநெல்வேலி, மைசூர் – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றது. இந்த ரயில் அக்டோபா் 4 மற்றும் 11 ஆம் தேதிகளில் எஸ்வந்த்பூரில் இருந்து பகல் 12.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.

special trains,festival,movement , சிறப்பு ரயில்கள்,பண்டிகை,இயக்கம்

அடுத்ததாக திருநெல்வேலி – எஸ்வந்த்பூா் சிறப்பு ரயில் அக்டோபர் 5 மற்றும் 12 ஆம் தேதிகளில், நெல்லையில் இருந்து காலை 10.40 மணிக்கு புறப்பட்டு இரவு 11.30 மணிக்கு எஸ்வந்த்பூரை சென்றடையும். இந்த ரயிலானது மதுரை, திருச்சி, திண்டுக்கல், கரூர், தருமபுரி, சேலம், விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் திருநெல்வேலி ரயிலை தொடர்ந்து தூத்துக்குடி – மைசூர் ரயிலானது இன்று (செப்.30) மைசூரில் இருந்து பகல் 12.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும்.

மேலும் நாளை (அக்.01) தூத்துக்குடி – மைசூர் சிறப்புக் கட்டண ரயில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12.25 மணிக்கு மைசூர் சென்று சேரும். இந்த ரயில் பெங்களூா், மாண்டியா, பெங்களூா் கன்டோன்மென்ட், ஒசூா், மதுரை, திருச்சி, கரூர் போன்ற இடங்கள் வாயிலாக செல்லும். இதில் மாற்றுத்திறனாளர்களுக்கான பெட்டிகளும் இணைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Tags :