Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்

சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்

By: vaithegi Sun, 27 Nov 2022 2:34:13 PM

சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்


சென்னை : சிறப்பு ரயில்கள் இயக்கம் .... சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில், கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இது பற்றி சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு வசதியாக கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக கோட்டயத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

செகந்திராபாத் - கோட்டயம் சிறப்பு ரயில் (வண்டி எண்-07125) இன்று (27ம் தேதி) மாலை 6.50 மணிக்கு செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நெல்லூர், கூடூர், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக நாளை (28-ம் தேதி) (திங்கட்கிழமை) மதியம் 12.22 மணிக்கு சேலம் வந்தடையும்.

trains,sabarimala ,ரயில்கள் ,சபரிமலை

இதனை அடுத்து பின்னர் அங்கிருந்து 12.25 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், அலுவா, எர்ணாகுளம் வழியாக இரவு 9 மணிக்கு கோட்டயம் சென்றடையும். இதேபோல் மறு மார்க்கத்தில் கோட்டயம் - செகந்திராபாத் சிறப்பு ரயில் (வண்டி எண்-07126) நாளை (28ம் தேதி) இரவு 11.15 மணிக்கு கோட்டயத்தில் இருந்து புறப்பட்டு எர்ணாகுளம், அலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக வரும் 29ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 7.23 மணிக்கு சேலம் வந்தடையும்.

இதனையடுத்து பின் இங்கிருந்து 7.25 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர் வழியாக வரும் 30ம் தேதி காலை 4 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும், என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|