Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீபாவளியையொட்டி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கம்

தீபாவளியையொட்டி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கம்

By: vaithegi Thu, 09 Nov 2023 10:31:04 AM

தீபாவளியையொட்டி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை: சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு ..இந்தாண்டு தீபாவளி திருநாள் எதிர்வரும் 12.11.2023 (ஞாயிறு) அன்று வருகின்றது. தீபாவளி திருநாள் கொண்டாட்டத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் இடப்பெயர்வடைவார்கள். தீபாவளி நோன்பு திங்கள் அன்று கொண்டாடப்படுகிறது.

இதையடுத்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த சென்னை- தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. வரும் நவ.10, 12ம் தேதிகளில் சென்னையிலிருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.

special trains,diwali ,சிறப்பு ரயில்கள்,தீபாவளி


இதேபோன்று வரும் நவ.11, 13ம் தேதிகளில் தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். டிக்கெட் முன்பதிவு விரைவில் தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் அறிவித்துள்ளது.

அதைத்தொடர்ந்து தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு நவ.10, 17, 24 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமைகளில்) சிறப்பு கட்டண ரயில் (06061) இயக்கப்படுகிறது. இச்சிறப்பு கட்டண ரயில், இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவிலை அடையும். இதேபோன்று சென்னை- நெல்லை இடையே நவம்பர் 9 ஆம் தேதி சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளது. சென்னை எழும்பூரிலிருந்து காலை 6 மணிக்கும் நெல்லையில் இருந்து பிற்பகல் 6 மணிக்கும் புறப்படுகிறது.

Tags :