Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீபாவளி பண்டிகை ... இந்த ஊர்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்

தீபாவளி பண்டிகை ... இந்த ஊர்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்

By: vaithegi Sat, 22 Oct 2022 09:02:47 AM

தீபாவளி பண்டிகை   ...    இந்த ஊர்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்

சென்னை: சிறப்பு ரெயில்கள் இயக்கம் இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கீழ்க்கண்ட ஊர்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. கொச்சுவேலி-தாம்பரம் (06044) இடையே பண்டிகைக்கால சிறப்பு ரெயில் வருகிற 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11.40 மணிக்கு இயக்கப்படுகிறது.

இதனை அடுத்து தாம்பரம்-கொச்சுவேலி (06043) இடையே பண்டிகைக்கால சிறப்பு ரெயில் வருகிற 26-ந் தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு இயக்கப்படுகிறது. * ஆமதாபாத்-திருச்சி (09419) இடையே வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 27-ந் தேதி மற்றும் நவம்பர் 3,10,17,24-ந் தேதிகளில் காலை 9.30 மணிக்கு இயக்கப்படுகிறது.

special trains,diwali ,சிறப்பு ரெயில்கள்,தீபாவளி


அதைத்தொடர்ந்து திருச்சி-ஆமதாபாத் (09420) இடையே வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 30-ந் தேதி மற்றும் நவம்பர் 6,13,20,27-ந் தேதிகளில் அதிகாலை 5.45 மணிக்கு இயக்கப்படுகிறது. நாகர்கோவில்-பெங்களூரு (வண்டி எண்: 06052) இடையே சிறப்பு ரெயில் வருகிற 25-ந் தேதி இரவு 7.35 மணிக்கு இயக்கப்படுகிறது. பெங்களூரு-நாகர்கோவில் (06051) இடையே சிறப்பு ரெயில் வருகிற 26-ந் தேதி காலை 10.15 மணிக்கு இயக்கப்படுகிறது.

மேலும் திருவனந்தபுரம்-சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் (06056) இடையே சிறப்பு ரெயில் வருகிற 25-ந் தேதி இரவு 7.40 மணிக்கு இயக்கப்படுகிறது. சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-திருவனந்தபுரம் (06055) இடையே சிறப்பு ரெயில் வருகிற 26-ந் தேதி மதியம் 3.10 மணிக்கு இயக்கப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :