Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் இருந்து நெல்லைக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னையில் இருந்து நெல்லைக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்

By: vaithegi Wed, 28 June 2023 09:10:06 AM

சென்னையில் இருந்து நெல்லைக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை: பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கம் ..... நாடு முழுவதும் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.எனவே இதனை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுகளுக்கு செல்ல ஏதுவாகவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நெல்லைக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதையடுத்து இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"*சென்னை சென்ட்ரலிலிருந்து இன்று இரவு 11.15 மணிக்கு புறப்படும் கரிப்ரத் சிறப்பு ரயில் (எண்:06052) சென்னை எழும்பூருக்கு நள்ளிரவு 12.10 மணிக்கும், தாம்பரத்துக்கு நள்ளிரவு 12.43 மணிக்கும் திருநெல்வேலிக்கு மறுநாள் காலை 11.45 மணிக்கும் சென்றடையும்.

special trains,chennai ,சிறப்பு ரயில்கள்,சென்னை

இதையடுத்து மறுமார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து 29-ந் தேதி (வியாழக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் கரிப்ரத் சிறப்பு ரயில் (எண்:06051) மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக இயக்கப்படும்.

மேலும் கோவை-திருப்பதி அதிவிரைவு ரயில் (எண்:22616/22615) 29-ந்தேதியும் விழுப்புரம்- திருப்பதி விரைவு ரயில் (எண்:16854/ 16853) நேற்று முதல் ஜூலை 2-ந்தேதி வரை காட்பாடியுடன் நிறுத்தப்படும். அதே தேதிகளில் இந்த ரயில்கள் காட்பாடியிலிருந்து புறப்பட்டு கோவை, விழுப்புரத்துக்கு இயக்கப்படும். தாம்பரம், சாந்த்ராகாச்சி அந்தியோதயா விரைவு ரெயில் (எண்:22842), பெங்களூரு- ஹவுரா குளிர்சாதன அதிவிரைவு ரயில் (எண்:22864) இன்று (புதன் கிழமை) ரத்து செய்யப்பட்டுள்ளது" என அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Tags :