Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மதுரை – கோவை இடையேயான விரைவு ரயிலின் வேகம் நாளை முதல் மாற்றம்

மதுரை – கோவை இடையேயான விரைவு ரயிலின் வேகம் நாளை முதல் மாற்றம்

By: vaithegi Sat, 24 Dec 2022 3:52:30 PM

மதுரை – கோவை இடையேயான விரைவு ரயிலின் வேகம் நாளை முதல் மாற்றம்

சென்னை: தமிழகத்தின் முக்கிய நகரமான மதுரை மற்றும் கோவையில் இன்றைக்கு பல தொழில் நிறுவனங்கள் வந்து விட்டது. இதனால் இந்நகரங்களில் மக்களின் போக்குவரத்தும் உயந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு தென்னக ரயில்வே சார்பில் அண்மையில் மதுரை – கோவை இடையே சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட்டது.

அதை தொடர்ந்து தற்போது கோவை – மதுரை இடையே இயக்கப்படும் விரைவு ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவை – பொள்ளாச்சி- பழனி – திண்டுக்கல் வழித்தடத்தில் இயக்கப்படும் இந்த விரைவு ரயிலின் வேகம் நாளை முதல் 75 கிலோ மீட்டரில் இருந்து 100 கி.மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

fast train speed,madurai,coimbatore ,விரைவு ரயிலின் வேகம், மதுரை , கோவை

எனவே இதன் மூலம் பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரயிலின் கால அட்டவணையும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி கோயம்புத்தூர் புறப்படும் ரயிலின் நேரம் மதியம் 02.40 மணியாக மாற்றப்பட்டுள்ளது.

மேலும் மதுரையில் இருந்து காலை 07.25 மணிக்கு புறப்பட்டு பழனியில் சிறிது நேரம் காத்திருந்து பிறகு புதிய ரயிலாக புறப்பட்டு கோயம்புத்தூருக்கு மதியம் 01.15 மணிக்கு சென்று சேரும். தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள ரயிலின் வேகத்தால் பயண நேரம் 35 நிமிடம் குறையும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

Tags :