Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருப்பதிக்கு ஆன்மிக சுற்றுலா திட்டம் இன்று முதல் 4 நகரங்களில் துவக்கம்

திருப்பதிக்கு ஆன்மிக சுற்றுலா திட்டம் இன்று முதல் 4 நகரங்களில் துவக்கம்

By: vaithegi Mon, 08 Aug 2022 6:38:13 PM

திருப்பதிக்கு ஆன்மிக சுற்றுலா திட்டம் இன்று முதல் 4 நகரங்களில் துவக்கம்

திருப்பதி: இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஆந்திர மாநிலம் திருப்பதி கோவில் முதன்மையான ஒன்றாக விளங்கி வருகிறது. பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் இடைவிடாமல் தொடர்ந்து வந்த மயமாக இருப்பார்கள்.அதிலும் தமிழ்நாட்டில் இருந்து மக்கள் திருப்பதிக்கு செல்வதை பெரும் விசேஷமாக நினைத்து குடும்பமாக செல்வார்கள்.

எனவே இவர்களுக்காகவே முன்னதாக தமிழக அரசு சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் ஆன்மிக சுற்றுலா திட்டத்தை செயல்படுத்தியது. அது தற்போது நடைமுறையிலும் இருந்து வருகிறது. மேலும், திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்காக செயல்படுத்தப்பட்ட சுற்றுலா திட்டம் தற்போது திருச்சி, மதுரை, சேலம் மற்றும் கோவை போன்ற இடங்களில் இருந்து செல்லும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் விரிவுபடுத்தியுள்ளது.

spiritual tourism,tirupati ,ஆன்மிக சுற்றுலா ,திருப்பதி

இந்த திட்டம் மூலம் ஏழுமலையான் பக்தர்கள் குறிப்பிட்ட நாள் மட்டுமின்றி தினசரி திருப்பதி சென்று வரவும் முடியும். இந்த சுற்றுலா திட்டம் இன்று (ஆகஸ்ட் 8) முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. .

திருப்பதி சுற்றுலா திட்டத்தில் பயன்பெற 7 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும்.
பக்தர்கள் ஏசி பஸ்சில் அழைத்து செல்லப்படுவார்கள்.
திருச்சி மற்றும் சேலத்தில் இருந்து திருப்பதிக்கு செல்லும் பெரியவர்களுக்கு ரூ.3,330 மற்றும் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ரூ.3000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மதுரை மற்றும் கோயம்புத்தூரில் இருந்து திருப்பதிக்கு செல்லும் பெரியவர்களுக்கு ரூ.4,000 மற்றும் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ரூ.3,700 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு இருவேளையும் சைவ உணவு வழங்கப்படும்.
சிறப்பு தரிசன பயணச்சீட்டு பக்தர்களுக்கு வழங்கப்படும். ( தனி கட்டணம் இல்லை

Tags :