Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிளவுப்பட்டு 5 குழுக்களாக பிரிந்துள்ளது... ஐ.நா. பொதுச்சபை தலைவர் தகவல்

பிளவுப்பட்டு 5 குழுக்களாக பிரிந்துள்ளது... ஐ.நா. பொதுச்சபை தலைவர் தகவல்

By: Nagaraj Mon, 30 Jan 2023 11:29:31 PM

பிளவுப்பட்டு 5 குழுக்களாக பிரிந்துள்ளது... ஐ.நா. பொதுச்சபை தலைவர் தகவல்

புதுடில்லி: ஐநா பொதுச் சபை பிளவுபட்டுள்ளது. குறைந்தது 5 குழுக்கள் பிரிந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன என்று ஐநா பொதுச் சபையின் தலைவர் சபா கொரோசி தெரிவித்துள்ளார்.

ஐநா பொதுச் சபையின் தலைவர் சபா கொரோசி, முதன்முறையாக இந்தியாவில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தலைவராகப் பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக அவர் பிரதமர் மோடியை சந்தித்தார். அதில், உக்ரைன் போர் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய சங்கரை சந்தித்து பேசினார்.

general-assembly,interview,korosi,president , ஐ.நா., கொரோசி, தலைவர், பேட்டி, பொதுசபை

ஜி-20 குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இதன்பின் கொரோசி இன்று கூறும்போது, உலகம் எப்படி இருக்க வேண்டும், அதில் இந்தியாவின் பங்கு என்னவாக இருக்க வேண்டும் என்ற பார்வை இந்தியாவுக்கு உள்ளது.

பொதுக்குழுவில் நாங்கள் அதை நிறைவேற்ற கடுமையாக உழைத்து வருகிறோம். ஐநா பொதுச் சபை பிளவுபட்டுள்ளது. குறைந்தது 5 குழுக்கள் பிரிந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

அதனால்தான் அனைத்து உறுப்பு நாடுகளையும், இந்த சீர்திருத்தங்களை தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன். அந்த விவாதங்களுக்கு மிகப்பெரிய உந்து சக்திகளில் ஒன்று பிரச்சினை.

இந்த 5 குழுக்களும் உலகில் அமைதியை நிலைநாட்டவும் பாதுகாப்பை உறுதி செய்யவும் சிறந்த அதிகாரங்களைக் கொண்டுள்ளன. இந்த அதிகாரம் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவதாக இருந்தது. தற்போது, ஒருவரை ஒருவர் தடுப்பதற்காக இந்த வீட்டோ அதிகாரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது என அவர் கூறியுள்ளார்.

Tags :
|