Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாஸ்கோவில் கொரோனா தடுப்பு மருந்தான ஸ்புட்னிக்-5 விநியோகம் தொடக்கம்

மாஸ்கோவில் கொரோனா தடுப்பு மருந்தான ஸ்புட்னிக்-5 விநியோகம் தொடக்கம்

By: Karunakaran Sun, 06 Dec 2020 1:22:28 PM

மாஸ்கோவில் கொரோனா தடுப்பு மருந்தான ஸ்புட்னிக்-5 விநியோகம் தொடக்கம்

கொரோனா வைரஸ் தடுப்பூசியை தயாரிப்பதில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வரும் நிலையில், உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி பதிவுசெய்து இருப்பதாக ரஷியா கடந்த ஆகஸ்டு மாதம் அறிவித்தது. ஸ்புட்னிக் 5 என அழைக்கப்படும் அந்த கொரோனா தடுப்பூசி, இந்தியாவிலும் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

இந்த தடுப்பூசி கொரோனாவில் இருந்து மக்களைப் பாதுகாப்பதில் 92 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும் என்று ரஷியா கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ஸ்புட்னிக்-5 தடுப்பு மருந்தை தனது மகளுக்கு செலுத்திப் பார்த்து அதனால் அவர் நல்ல பயனடைந்ததாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்திருந்தார்.

sputnik-5,corona vaccine,moscow,russia ,ஸ்பூட்னிக் -5, கொரோனா தடுப்பூசி, மாஸ்கோ, ரஷ்யா

தற்போது 70-க்கும் மேற்பட்ட ரஷ்ய மருத்துவமனைகளில் இந்த தடுப்பு மருந்து ரஷ்ய அரசால் விநியோகிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு கருதி கர்ப்பிணி பெண்கள், மூச்சு திணறல் உள்ளவர்கள் உள்ளிட்ட சிலருக்கு தற்போது தடுப்பு மருந்து வழங்கப்படவில்லை. இந்த தடுப்பு மருந்து இரண்டு ஊசிகள் மூலமாக செலுத்தப்படுகிறது.

முதல் ஊசி நோயாளியின் உடலில் செலுத்தப்பட்டு 21 நாட்களுக்கு பின்னர் இரண்டாவது ஊசி செலுத்தப்படும். முன்னதாக ரஷியாவின் ஸ்புட்னிக் 5 தடுப்பூசி இந்தியா மற்றும் சீனாவிலும் உற்பத்தி செய்யப்படும் என ரஷிய அதிபர் புதின் தெரிவித்திருந்தார். காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் 12-வது மாநாட்டின் போது புதின் இதனை தெரிவித்தார்.

Tags :
|