Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவிலும் பரவியது... இரு குழந்தைகளுக்கு குரங்கம்மை பாதிப்பு

அமெரிக்காவிலும் பரவியது... இரு குழந்தைகளுக்கு குரங்கம்மை பாதிப்பு

By: Nagaraj Sat, 23 July 2022 11:35:11 PM

அமெரிக்காவிலும் பரவியது... இரு குழந்தைகளுக்கு குரங்கம்மை பாதிப்பு

அமெரிக்கா: குரங்கம்மை நோய் பல்வேறு நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் குரங்கம்மை பரவியது. தற்போது ஆசிய நாடுகளிலும் பரவி உள்ளது. அந்த வகையில் கலிபோர்னியாவிலும் குரங்கம்மை பரவி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


அமெரிக்காவில் முதல் முறையாக குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 2 குழந்தைகளுக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக அந்நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

epilepsy,affected,two children,california,washington,affected ,குரங்கம்மை, பாதிப்பு, இரு குழந்தைகள், கலிபோர்னியா, வாஷிங்டன், பாதிப்பு

கலிபோர்னியாவில் ஒரு குழந்தைக்கு குரங்கம்மை பாதிப்பு உள்ளது. அதே போல் வாஷிங்டனில் அமெரிக்க குடியுரிமை அல்லாத ஒரு குழந்தைக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இரு குழந்தைகளும் நலமுடன் இருப்பதாகவும், சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அவர்களுக்கு குரங்கம்மை பாதிப்பு எப்படி ஏற்பட்டது என்பது ஆராயப்பட்டு வருகிறது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாடாக தற்போது குரங்கம்மை நோய் பரவி வருவது மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பாதிப்பே இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் தற்போது குரங்கம்மை நோயும் மிரட்டுகிறது.

Tags :