Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ‘ஸ்புட்னிக் வி’ கொரோனா தடுப்பூசிக்காக ரஷியாவுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு

‘ஸ்புட்னிக் வி’ கொரோனா தடுப்பூசிக்காக ரஷியாவுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு

By: Karunakaran Tue, 22 Sept 2020 3:11:14 PM

‘ஸ்புட்னிக் வி’ கொரோனா தடுப்பூசிக்காக ரஷியாவுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு

சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகில் 200க்கும் ஏரம்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான முதல் தடுப்பூசியை முதல் நாடாக ரஷியா கடந்த மாத தொடக்கத்திலேயே தடுப்பூசி ஒன்றை பதிவு செய்து கொண்டுள்ளது.

ரஷியா கண்டுபிடித்துள்ள இந்த கொரோனா தடுப்பூசி ‘ஸ்புட்னிக் வி’ என்றழைக்கப்படுகிறது. ரஷியாவின் தயாரிப்பான ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிக்கு 20-க்கும் மேற்பட்ட நாடுகள் 100 கோடிக்கும் அதிகமான டோஸ்களுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளன. இதைப்போல இந்த தடுப்பூசியை அதிக அளவில் தயாரிக்க 5 நாடுகளும் ஒப்பந்தம் போட்டுள்ளன.

sputnik v,corona vaccine,world health organization,russia ,ஸ்பூட்னிக் வி, கொரோனா தடுப்பூசி, உலக சுகாதார அமைப்பு, ரஷ்யா

இந்நிலையில் ரஷிய சுகாதார மந்திரி மிகெயில் முராஸ்கோவை உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய தலைவர் ஹன்ஸ் குளூஜ் சந்தித்து பேசினார். அதன்பின் ஹன்ஸ் குளூஜ் பேட்டி அளித்தபோது, கொரோனா தடுப்பூசியை உருவாக்கியதற்காக குறிப்பாக ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிக்காக ரஷியாவுக்கு உலக சுகாதார அமைப்பு மிகுந்த பாராட்டு தெரிவிக்கிறது என்று கூறினார்.

மேலும் அவர், பாதுகாப்பு மற்றும் வலிமையான ஒரு தடுப்பூசியை உருவாக்கியதற்காக ரஷியாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார். உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :