Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவுடன் இணைந்து ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்யப்படும் - ரஷியா

இந்தியாவுடன் இணைந்து ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்யப்படும் - ரஷியா

By: Karunakaran Sat, 28 Nov 2020 5:58:12 PM

இந்தியாவுடன் இணைந்து ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்யப்படும் - ரஷியா

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ரஷ்யா தனது உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்துவிட்டது.

ஸ்புட்னிக்-வி எனப்படும் இந்த தடுப்பூசியின் பரிசோதனை பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியாவுடன் இணைந்து அடுத்த வருட தொடக்கத்தில் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்யப்படும் என ரஷியா கூறி உள்ளது.

sputnik-v,corona vaccine,india,russia ,ஸ்பூட்னிக்-வி, கொரோனா தடுப்பூசி, இந்தியா, ரஷ்யா

இந்தியாவின் ஹெட்டிரோ மருந்து தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து ஆண்டுக்கு ஸ்புட்னிக் மருந்தின் 10 கோடி டோஸ்கள் உற்பத்தி செய்யப்படும் என ரஷியாவின் நேரடி முதலீட்டு நிதியம் அறிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது பரிசோதனையில் இருக்கும் இந்த தடுப்பு மருந்து 95 சதவீதம் செயல்திறன் கொண்டிருப்பதாகவும் ரஷியா தெரிவித்து உள்ளது.

சர்வதேச சந்தைகளில் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி ஒரு டோஸ்-க்கு 10 டாலர் என விலை நிர்ணயிக்கப்படும் என்றும், இது பதிவுசெய்யப்பட்ட வேறு சில தடுப்பூசிகளைக் காட்டிலும் விலை குறைவு என்றும் ரஷியா கூறி உள்ளது.

Tags :
|