Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசி சர்வதேச சந்தைகளில் குறைவான விலையில் விற்கப்படும் - ரஷியா அறிவிப்பு

‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசி சர்வதேச சந்தைகளில் குறைவான விலையில் விற்கப்படும் - ரஷியா அறிவிப்பு

By: Karunakaran Wed, 25 Nov 2020 2:31:06 PM

‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசி சர்வதேச சந்தைகளில் குறைவான விலையில் விற்கப்படும் - ரஷியா அறிவிப்பு

உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியாக ‘ஸ்புட்னிக்-வி’ என்ற தடுப்பூசியை ரஷியா உருவாக்கி உள்ளதாக கடந்த ஆகஸ்டு மாதம் அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்தார். இந்நிலையில், ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசி ஒரு லட்சத்து 17 ஆயிரம் டோஸ் தடுப்பூசி தயாரித்து முடித்து, சந்தையில் விற்பனைக்காக விடுவிக்கப்பட்டுள்ளது.

இதை மாஸ்கோவில் நேற்று அறிவித்த ரஷிய துணை பிரதமர் டட்யானா கோலிகோவா, இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 2 கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகளை தயாரித்து முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். இந்த தடுப்பூசி 95 சதவீதம் செயல்திறனை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

sputnik-v vaccine,international markets,lower prices,russia ,ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி, சர்வதேச சந்தைகள், குறைந்த விலை, ரஷ்யா

இந்த தடுப்பூசியின் இறுதிக்கட்ட சோதனைக்கு மத்தியில் அதன் தயாரிப்பும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி சர்வதேச சந்தைகளில் ஒரு ‘டோஸ்’ 10 டாலர்களுக்கும் குறைவான விலையில் (சுமார் ரூ.750) விற்கப்படும், இது அமெரிக்காவின் பைசர், மாடர்னா தடுப்பூசிகளின் தரத்தில், அவற்றின் விலையை விட 2 அல்லது அதற்கு அதிகமான மடங்கு மலிவு என ரஷிய நேரடி முதலீட்டு நிதியம் நேற்று அறிவித்துள்ளது.

இந்த தடுப்பூசி சர்வதேச சந்தைகளில் வரும் பிப்ரவரி மாதம் முதல் கிடைக்கும். ஒவ்வொருவரும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் 2 தடுப்பூசி ‘டோஸ்’ போட்டுக்கொள்ள வேண்டும். இதுவரை வெளியான தடுப்பூசிகளில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி குறைந்த விலையில் அறிமுகமாகியுள்ளது.

Tags :