ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யாழ்., மாவட்ட தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு
By: Nagaraj Wed, 22 July 2020 6:22:16 PM
தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு... ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் விஞ்ஞாபனம் “என் கனவு யாழ்” செயல்திட்ட வரைவாக இன்றைய தினம் வெளியிடப்பட்டது.
குறித்த நிகழ்வு முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளருமாகிய அங்கஜன் இராமநாதன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட வேட்பாளர்களை, முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த நிலையில், அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் 5 முன்னணி மாவட்டங்களில்
ஒன்றாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகியவற்றை மாற்றும் நோக்குடன், “என்
கனவு யாழ்” என்னும் தொனிப் பொருளில், குறித்த தேர்தல் விஞ்ஞாபனம்
வெளியிடப்பட்டுள்ளது. குறித்த செயல்திட்ட வரைவில் கூறப்பட்டுள்ளவற்றில்
சில...
அரசியல் தீர்விற்கான ஆணித்தரமான அழுத்தம், மீண்டும்
கல்வியில் முதலிடம், துரித பொருளாதார வளர்ச்சி, விவசாயம், மீன்பிடி,
கால்நடை துறைகளில் துரித மீளெழுச்சி, மொழி, கலை, கலாச்சார, பண்பாட்டு,
இலக்கிய புத்தாக்கம், அனைத்து தமிழ் உறவுகளையும் ஒரே புள்ளியில் இணைத்தல்
உட்பட பல்வேறு செயல் திட்டங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,
“என் கனவு யாழ்” என்னும் தொனிப் பொருளில் அமைந்த இந்த தேர்தல் விஞ்ஞாபனம்
மற்றும் பல விடயங்களை, www.enkanavuyarl.lk எனும் இணையத் தளத்தின் ஊடாக
அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.