Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதிய அரசாங்கம் வந்த பின்னர் 75வது இடத்திற்கு சென்ற இலங்கை... எம்.பி., குற்றச்சாட்டு

புதிய அரசாங்கம் வந்த பின்னர் 75வது இடத்திற்கு சென்ற இலங்கை... எம்.பி., குற்றச்சாட்டு

By: Nagaraj Wed, 07 Dec 2022 12:02:32 PM

புதிய அரசாங்கம் வந்த பின்னர் 75வது இடத்திற்கு சென்ற இலங்கை... எம்.பி., குற்றச்சாட்டு

கொழும்பு: புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் உலக உணவுப் பாதுகாப்பில் 65வது இடத்தில் இருந்த இலங்கை 75 ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

இதை நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.

rice production,farmers,food security,rice sales ,நெல் உற்பத்தி, விவசாயிகள், உணவு பாதுகாப்பு, அரிசி விற்பனை

வெளிநாடுகளில் இருந்து 7 லட்சம் மெட்ரிக் டன் அரிசி கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் அரிசியை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். விவசாயிகள் அதிகம் உள்ள பொலன்னறுவை இன்று போசாக்கு குறைபாடுள்ள மாவட்டமாக மாறியுள்ளது என்றும் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.

ஒரு கிலோ நெல் உற்பத்தி செய்வதற்கு நூறு ரூபாவுக்கு மேல் செலவாகும் நிலையில் ஒரு கிலோ நெல் 90 ரூபாவிற்கும் குறைவாகவே விற்பனை செய்யப்படுவதாக சுட்டிக்காட்டினார்.


Tags :