Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிறந்த புனைக்கதை படைப்புக்காக புக்கர் பரிசு வென்ற இலங்கை எழுத்தாளர்

சிறந்த புனைக்கதை படைப்புக்காக புக்கர் பரிசு வென்ற இலங்கை எழுத்தாளர்

By: Nagaraj Thu, 20 Oct 2022 09:39:35 AM

சிறந்த புனைக்கதை படைப்புக்காக புக்கர் பரிசு வென்ற இலங்கை எழுத்தாளர்

இலங்கை: புக்கர் பரிசு வென்றார்... சிறந்த புனைக்கதை படைப்புக்காக இந்தாண்டிற்கான புக்கர் பரிசு இலங்கையை சேர்ந்த எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலகவுக்கு கிடைத்துள்ளது.

எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய கவுரவம் மிக்க விருதாக ‘சர்வதேச புக்கர் பரிசு’ சொல்லப்படுகிறது. உலகின் பல நாடுகளிலும் அதன் பிராந்திய மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நாவலுக்காக இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

booker prize,author,sri lanka,war,fiction,people ,புக்கர் விருது, எழுத்தாளர், இலங்கை,  போர், புனைகதை, மக்கள்

அந்தவகையில் இந்தாண்டுக்கான புக்கர் பரிசு இலங்கையை சேர்ந்த எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலகவுக்கு கிடைத்துள்ளது. லண்டனில் உள்ள ரவுண்ட்ஹவுசில் நடைபெற்ற இந்த விழாவில் விருது வழங்கப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து 169 நாவல்கள் விருதுக்காக சமர்பிக்கப்பட்ட நிலையில், ஷெஹான் எழுதிய “தி செவன் மூன்ஸ் ஆப் மாலி அல்மேடா” என்ற புனைகதை இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது.

“தி செவன் மூன்ஸ் ஆப் மாலி அல்மேடா” நாவல் இலங்கையில் நடந்த போரினால் பாதிக்கப்பட்ட மக்களையும், அந்நாட்டை பற்றியும் கொண்ட புனைகதையாக எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|