Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நேற்று இரவு காலமானார்

இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நேற்று இரவு காலமானார்

By: Nagaraj Wed, 27 May 2020 10:13:47 AM

இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நேற்று இரவு காலமானார்

இலங்கை அமைச்சரும் மலையகத் தமிழர் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதேபோல் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும். லோக்சபா எம்.பி.யுமான திருமாவளவன் உட்பட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

indian ambassador,condolences,minister of sri lanka,sudden demise ,இந்திய தூதர், இரங்கல் செய்தி, இலங்கை அமைச்சர், திடீர் மறைவு

இலங்கையை சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகளில் மிக முக்கியமானவர் ஆறுமுகன் தொண்டமான். சௌம்யமூர்த்தி ஆறுமுகன் ராமநாதன் தொண்டமான் என்ற இவர் அங்கு 30 வருடங்களாக அரசியலில் களத்தில் இருந்தவர்.

இலங்கையின் மலையகத் தமிழ் அரசியல்வாதியான இவர் தமிழர்கள் இடையே அதிக பிரபலம் ஆனவர். இவரது மறைவுக்கு இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஆறுமுகன் தொண்டமானின் துன்பகரமான திடீர் மறைவினால் மிகுந்த அதிர்ச்சி அடைகின்றேன். ஆழ்ந்த அனுதாபங்கள் என்று தெரிவித்துள்ளார்.

indian ambassador,condolences,minister of sri lanka,sudden demise ,இந்திய தூதர், இரங்கல் செய்தி, இலங்கை அமைச்சர், திடீர் மறைவு

இதேபோல் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் இரங்கல் செய்தியில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன். அவரை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தன் இரங்கல் செய்தியில் ஆறுமுகத் தொண்டமான் திடீரென காலமானார் என்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்தும் வாடும் குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags :