Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு

By: Nagaraj Thu, 11 June 2020 3:33:26 PM

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு

இலங்கையில், 'கொரோனா' அச்சுறுத்தல் காரணமாக, ஒத்திவைக்கப்பட்ட பார்லிமென்ட் தேர்தல், வரும் ஆகஸ்ட், 5ல் நடைபெறும்' என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கையில், ஆறு மாதங்களுக்கு முன் பார்லி.,யை கலைத்து, மார்ச், 2ல், அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார். 'பார்லிக்கு, ஏப்ரல், 25ல் தேர்தல் நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஜூன், 20ம் தேதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

date of election,mahinda deshapriya,sri lanka,elections commission ,தேர்தல் தேதி, மஹிந்த தேசப்பிரிய, இலங்கை, தேர்தல்கள் ஆணைக்குழு

இதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஆனால், வரும், 20ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்ட தேர்தலும், ஒத்தி வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில், எதிர்க்கட்சிகள் மனு தாக்கல் செய்தன. அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், 'இலங்கை பார்லிமென்ட் தேர்தல், ஆகஸ்ட், 5ல் நடைபெறும்' என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

''கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, முக கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியை பின்பற்றி, புதிய சுகாதார விதிமுறைகளுடன் தேர்தல் நடத்தப்படும்,'' என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Tags :