Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இலங்கை நிழல் உலக தாதாக்கள் தமிழகத்தில் பதுங்கல்? கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை

இலங்கை நிழல் உலக தாதாக்கள் தமிழகத்தில் பதுங்கல்? கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை

By: Nagaraj Mon, 19 Oct 2020 09:18:29 AM

இலங்கை நிழல் உலக தாதாக்கள் தமிழகத்தில் பதுங்கல்? கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை

இலங்கை நிழல் உலக தாதாக்கள் குறித்து தமிழகத்தில் வசிக்கும் இலங்கை நபர்களிடம் கியூ பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையைச் சேர்ந்த நிழல் உலக தாதாக்கள் தமிழகத்தில் பதுங்கி இருப்பதாக இன்டர்போல் போலீ ஸார் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, தமிழகத்தில் வசிக்கும் இலங்கை நபர்களிடம் கியூ பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அகதிகள் முகாம்களிலும் விசாரணை, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட அங்கொட லொக்கா என்பவர், தமிழகத்தில் தலைமறைவாக இருந்துவந்தார். அவர், கடந்த ஜூலை மாதம் கோவையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கை தமிழக சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதேபோல, போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய இலங்கையைச் சேர்ந்த அலகாபெருமகா சுனில் காமினி என்ற பொன்சேகா (52), போலி பாஸ்போர்ட்டில் தமிழகம் வந்து தலைமறைவாக இருந்தார். அவரை, கடந்த 13-ம் தேதி தமிழக கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

sri lanka,shadow world donors,q division,investigation,documents ,
இலங்கை, நிழல் உலக தாதாக்கள், கியூ பிரிவு, விசாரணை, ஆவணங்கள்

இலங்கையைச் சேர்ந்த பிரபல தாதாக்கள் தமிழகத்தில் பதுங்கி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இலங்கையைச் சேர்ந்த சுமார் 10 தாதாக்கள் தமிழகத்தில் பதுங்கி இருப்பதாக சர்வதேச போலீஸான 'இன்டர்போல்' எச்சரிக்கை விடுத்தது. தொடர்ந்து தமிழகத்தில் பதுங்கி இருக்கும் இலங்கை தாதாக்களை பிடிக்க கியூ பிரிவு போலீஸார் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அங்கொட லொக்கா மற்றும் பொன்சேகா ஆகியோருக்கு உதவி செய்தவர்களை பிடித்து கியூ பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். தமிழகத்தில் இலங்கை நபர்கள் வசிக்கும் பகுதிகளிலும், முகாம்களிலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கையில் இருந்து வரும் தொலைபேசி தகவல்களை கண்காணித்து, அதனடிப்படையில் சந்தேக நபர்கள் சிலரை பிடித்து விசாரித்து வருகின்றனர். தமிழகத்தில் தலைமறைவாக இருக்கும் இலங்கை தாதாக்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள போலீஸாருக்கு தமிழகத்தில் வசதியாக வாழும் சில இலங்கை நபர்களும் உதவி செய்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இலங்கை தமிழர்கள் வசிக்கும் பகுதியில் சிலர் கூடுதலாக இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அங்கு விசாரணை நடந்து வருகிறது. இதுவரை தமிழகம் முழுவதும் சந்தேகத்தின்பேரில் இலங்கை தமிழர்கள் 17 பேரை பிடித்து கியூ பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். அவ்வாறு சிக்கியவர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லாததால் அவர்களை விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். கடலோர பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags :