Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எஸ்.எஸ்.சி. தேர்வு: விண்ணப்பிக்க மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

எஸ்.எஸ்.சி. தேர்வு: விண்ணப்பிக்க மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

By: vaithegi Sat, 18 Feb 2023 5:50:06 PM

எஸ்.எஸ்.சி. தேர்வு: விண்ணப்பிக்க மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

புதுடெல்லி: 1 வாரம் நீட்டிப்பு ... மத்திய அரசின் பல துறைகளில் காலியாக உள்ள மல்டி டாஸ்கிங் பணியில் சேர்வதற்கான போட்டித் தேர்வினை எஸ்எஸ்சி அறிவித்தது. விண்ணப்ப செயல்முறை கடந்த மாதம் 18-ம் தேதி முதல் பிப்ரவரி 16-ம் தேதி வரை பெறப்பட்ட நிலையில், நேற்று கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பித்தாரர்கள் விண்ணப்பித்தனர்.

இதனால், தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டதால், இணையதளம் முடங்கியது. இதையடுத்து இயங்காத இணையதளத்தை எஸ்எஸ்சி ஆணையம் உடனடியாக சரி செய்ய வேண்டும் என கோரிக்கைகள் பல எழுந்தது.

ssc examination,central govt ,எஸ்.எஸ்.சி. தேர்வு,மத்திய அரசு

இந்த நிலையில், எஸ்.எஸ்.சி. தேர்வாணையம் அறிவித்துள்ள எம்டிஎஸ் (மல்டி டாஸ்கிங் ) தேர்விற்கான விண்ணப்ப செயல்முறை மேலும் 1 வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே இதன் மூலம் பிப்ரவரி 26-ம் தேதி நள்ளிரவு 11 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்.எஸ்.சி. மல்டி டாஸ்கிங் பணியில் சேர்வதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ssc.nic.inஎன்ற அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பிக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :