Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவுக்கு மத்தியில் கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது

கொரோனாவுக்கு மத்தியில் கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது

By: Karunakaran Fri, 26 June 2020 10:06:24 AM

கொரோனாவுக்கு மத்தியில் கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், கர்நாடகத்தில் ஜூன் 25-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் அறிவித்தார். தற்போது கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், தேர்வை ரத்து செய்ய கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இந்நிலையில் கர்நாடக பள்ளி கல்வி தேர்வாணையம் சார்பில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு திட்டமிட்டபடி நேற்று தொடங்கியது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 2,879 தேர்வு மையங்களில் 8 லட்சத்து 48 ஆயிரத்து 203 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். அனைத்து மாணவர்களும் முகக்கவசம் அணிந்து தேர்வு எழுத வந்திருந்தனர்.

coronavirus,karnataka,sslc exam,corona affect ,கொரோனா வைரஸ்,கர்நாடகா,கொரோனா பாதிப்பு, எஸ்.எஸ்.எல்.சி தேர்வு

பட்டநாயக்கனஹள்ளி தேர்வு மையத்திற்கு வந்த ஒரு மாணவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால், அவர் பெற்றோருடன் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். சில தேர்வு மையங்களில் வைரஸ் அறிகுறி இருந்த மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. ராய்ச்சூரில் தேர்வு மையம் முன்பு, மாணவ-மாணவிகளின் பெற்றோர் அதிக எண்ணிக்கையில் கூடியிருந்ததால், போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டினர்.

பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பெங்களூருவில் சில தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். முதல்-மந்திரி எடியூரப்பா, 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். தனிமனித விலகலை பின்பற்றுதல், சானிடைசர் திரவத்தை பயன்படுத்துதல் போன்றவற்றை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என எடியூரப்பா மாணவர்களிடம் அறிவுறுத்தினார்.

Tags :