Advertisement

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளையுடன் நிறைவு

By: vaithegi Wed, 19 Apr 2023 10:00:50 AM

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளையுடன் நிறைவு


சென்னை: பிளஸ்-2, பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு முடிவு பெற்ற நிலையில், அவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து கொண்டு வருகின்றன. இதையடுத்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கடந்த 6-ம் தேதி தொடங்கியது. இத்தேர்வை 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எழுதுகிறார்கள்.

இதையடுத்து இதுவரை தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் தேர்வு முடிந்துள்ள நிலையில், நாளை சமூக அறிவியல் தேர்வுடன் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நிறைவு பெறுகிறது. இதனைத்தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 25-ம் தேதி முதல் அடுத்த மாதம் (மே) 3-ம் தேதி வரை வேலைநாட்களில் நடைபெறவுள்ளது. விடைத்தாள் திருத்தி மதிப்பெண்ணை ஆன்லைன் வாயிலாக வருகிற 25-ம் தேதி முதல் அடுத்த மாதம் 4-ம் தேதி வரை பதிவேற்றம் செய்யப்படும் வகையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

public examination,sslc,tamil nadu,puducherry ,பொதுத்தேர்வு ,எஸ்.எஸ்.எல்.சி. ,தமிழ்நாடு ,புதுச்சேரி


இந்நிலையில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவதற்கு ஏற்றவாறு மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றி அரசு தேர்வுத்துறை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. இதையடுத்து அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

மதிப்பீட்டு பணியை செய்து முடிக்க தேவையான ஆசிரியர்களின் எண்ணிக்கையினை சரியாக கணக்கிட்டு பாடவாரியான, பயிற்று மொழி வாரியான ஆசிரியர்களை உடனடியாக பணிவிடுவிப்பு செய்து முகாம் பணிக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும் தமிழ் வழியில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தமிழ்வழி விடைத்தாள்களையும், ஆங்கில வழியில் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆங்கில வழி விடைத்தாள்களையும் மட்டுமே மதிப்பீடு செய்ய வேண்டும். அதற்கேற்றவகையில் தமிழ், ஆங்கில வழிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களை கணக்கிட்டு நியமனம் செய்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|