Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ரத்து செய்ய வேண்டும் - குமாரசாமி வலியுறுத்தல்

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ரத்து செய்ய வேண்டும் - குமாரசாமி வலியுறுத்தல்

By: Karunakaran Wed, 24 June 2020 1:26:33 PM

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ரத்து செய்ய வேண்டும் - குமாரசாமி வலியுறுத்தல்

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில் பெங்களூரில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பேட்டி அளித்தபோது, கர்நாடகத்தில் மீண்டும் முழு ஊரடங்கை 20 நாட்களுக்கு அமல்படுத்த வேண்டும் எனவும், கர்நாடகத்தில் 25-ந் தேதி தொடங்கும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது அக்டோபர் மாதம் வரை தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. நமது நாட்டில் மக்கள் நெருக்கம் அதிகம் என்பதால், கொரோனா அதிகரித்து வருகிறது. ஊரடங்கு தளர்வால், கொரோனா பாதிப்பு அசுரவேகத்தில் அதிகரித்து வருகிறது. அதனால் மீண்டும் 20 நாட்கள் தேசிய அளவில் முழு ஊரடங்கை அமல்படுத்த பிரதமர் முடிவு எடுக்க வேண்டும். மக்களின் பாதுகாப்பை பின்னுக்கு தள்ளி பொருளாதாரத்தை மீட்டெடுப்பது சரியல்ல என்று தெரிவித்துள்ளார்.

kumaraswamy,karnataka,sslc exam,corona virus ,கர்நாடகா ,எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு,குமாரசாமி,கொரோனா வைரஸ்

மேலும், கர்நாடகத்தில் நாளை தொடங்கும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது அக்டோபர் மாதம் வரை தேர்வை ஒத்திவைக்க வேண்டும். அண்டை மாநிலங்களில் இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதை கர்நாடக அரசு யோசித்து பார்க்க வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குவது சரியல்ல என்று கூறியுள்ளார்.

கர்நாடக அரசு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள சில பகுதிகளை மட்டும் சீல் வைத்துள்ளது. இதனால் எந்த பயனும் இல்லை. பெங்களூரு மக்களை காப்பாற்ற வேண்டும் என்றால், கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூருவில் மீண்டும் முழு ஊரடங்கை 20 நாட்களுக்கு அமல்படுத்த வேண்டும் என்று குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.

Tags :