Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை தொடக்கம்; ஆன்லைன் வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை தொடக்கம்; ஆன்லைன் வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை

By: Monisha Tue, 22 Sept 2020 09:02:32 AM

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை தொடக்கம்; ஆன்லைன் வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை

1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறைகள் தொடங்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது வரை கொரோனா தாக்கம் குறையாததால் பள்ளிகளுக்கு விடுமுறை நீண்டுகொண்டே செல்கிறது. எனவே மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது.

school students,quarterly holidays,online classes,school education ,பள்ளி மாணவர்கள்,காலாண்டு விடுமுறை,ஆன்லைன் வகுப்புகள்,பள்ளிக்கல்வித்துறை

இந்நிலையில், 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறைகள் தொடங்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இன்று முதல் செப்டம்பர் 25-ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்படுகிறது. விடுமுறை நாட்களில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags :