Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வட்டி விகிதத்தை உயர்த்தியது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

வட்டி விகிதத்தை உயர்த்தியது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

By: Nagaraj Wed, 15 Feb 2023 9:50:34 PM

வட்டி விகிதத்தை உயர்த்தியது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

மும்பை: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கடனுக்கான வட்டி விகிதத்தை 0.1% உயர்த்தியுள்ளது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் உயர்த்தியது.

இதையடுத்து, பாங்க் ஆப் பரோடா, பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிகள் வட்டி விகித உயர்வை அறிவித்தன.இதற்கிடையில், நாட்டின் முன்னணி வங்கியான பாரத ஸ்டேட் வங்கி அனைத்து வகையான கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.1% உயர்த்தி அறிவித்துள்ளது.

announced,increased interest rate,sbi bank , அமல், எஸ்பிஐ வங்கி, கடனுக்கான வட்டி விகித உயர்வு

இதன் காரணமாக தனிநபர் கடன், வீட்டுக்கடன், கார் கடன் என பல்வேறு வகையான கடன்களுக்கான வட்டி விகிதத்தை எஸ்பிஐ உயர்த்தியது. இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

குறைந்தபட்ச வட்டி விகிதம் 7.85 சதவீதத்தில் இருந்து 7.95 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பைத் தொடர்ந்து மற்ற வங்கிகளும் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன .

Tags :