Advertisement

மக்களுக்கு மாநில அரசுகள் அறிவுறுத்தல்

By: vaithegi Thu, 22 Dec 2022 4:22:19 PM

மக்களுக்கு மாநில அரசுகள் அறிவுறுத்தல்

இந்தியா: சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் திடீர் எழுச்சி. இதற்கு காரணம், ஒமைக்ரானின் பிஎப்.7 துணை வைரஸ்கள்தான்.இந்த வைரஸ் பிஏ.5.2.1.7 வைரஸ் போன்றுதான் என சொல்லப்படுகிறது. இந்த வைரஸ் அதிவேகமாக பரவுகிற தன்மையைக் கொண்டுள்ளது. இந்த வைரஸ், சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளிலும் பரவி விட்டது.

இதனை அடுத்து இந்த பிஎப்.7 வைரஸ், இந்தியாவிலும் நுழைந்துவிட்டது. குஜராத்தில் கடந்த அக்டோபர் மாதம் 2 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை குஜராத் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் கண்டறிந்துள்ளது. ஒடிசாவிலும் அவ்வைரஸ் ஒருவருக்கு பாதித்துள்ளது. இந்தியாவில் இதுவரை மட்டும் 3 பேரை இந்த வைரஸ் பாதித்துள்ளதாக அதிகார வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

state governments,viruses ,மாநில அரசுகள்,வைரஸ்கள்

இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் இதுகுறித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சூக் மாண்டவியா அவர்கள் கூறியதாவது , கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணியுமாறு மக்களுக்கு மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும்.கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும்.புதிய வகை கொரோனா பரவலை தீவ்ரமாக கண்காணித்து கொண்டு வருகிறோம் .

மேலும் இந்த புதிய கொரோனா வகையை கண்டறிய சோதனைகள் நடைபெற்று கொண்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று விகிதம் குறைந்து கொண்டு வருகிறது.சீனா கொரோனா பரவல் நிலவரத்தை இந்தியா கவனித்து வருகிறது. என அவர் தெரிவித்துள்ளார்.

Tags :