Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாநில அரசுகள் தயாராக இருக்க வேண்டும்... அறிவுறுத்திய மத்திய அரசு

மாநில அரசுகள் தயாராக இருக்க வேண்டும்... அறிவுறுத்திய மத்திய அரசு

By: Nagaraj Fri, 23 Dec 2022 11:09:38 PM

மாநில அரசுகள் தயாராக இருக்க வேண்டும்... அறிவுறுத்திய மத்திய அரசு

புதுடெல்லி: மத்திய அரசு அறிவுறுத்தல்... இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்தாலும், சர்வதேச அளவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அனைத்து மாநில அரசுகளும் தயாராக இருக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.


இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கடந்த வாரம் அக்டோபர் 7 முதல் 13 வரை, நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,408 ஆக இருந்தது.

although the corona,decreasing day,governments should be prepared,health department , இந்தியா, கொரோனா, பாதிப்பு, மாநில அரசு

ஜப்பானில் தினசரி 1 லட்சத்து 54 ஆயிரத்து 521 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது உலகளாவிய பரவலில் 26.80 சதவீதமாகும். உலகளாவிய தொற்றுநோய்களில் இந்தியாவின் பங்கு 0.03 சதவீதம் மட்டுமே. இருப்பினும், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு அனைத்து மாநில அரசுகளும் தயாராக இருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.


குறிப்பாக, ஆக்ஸிஜன் உற்பத்தி, வென்டிலேட்டர்கள் கிடைப்பது, வாகன இருப்பு மற்றும் பணியாளர்கள் போன்றவற்றில் மாநில அரசுகள் உரிய கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது” என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :