Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பணிப்புரை

பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பணிப்புரை

By: Nagaraj Tue, 13 Dec 2022 10:54:02 AM

பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பணிப்புரை

கொழும்பு: தாக்குதல் சம்பவம் குறித்து பணிப்புரை... பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான முழுமையான அறிக்கையை தமக்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இவ்வாறான சம்பவங்களுக்கு முகங்கொடுக்க இடமளிக்கக் கூடாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பு பிரதானிகளிடம் தெரிவித்துள்ளார்.

treatment,hospital,student group,peradeniya,university ,சிகிச்சை, வைத்தியசாலை, மாணவர் குழு, பேராதனை, பல்கலைக்கழகம்

தாக்குதல் சம்பவம் தொடர்பிலான முழுமையான அறிக்கை கிடைத்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மாணவர் குழுவினால் தாக்கப்பட்டதாக கூறப்படும் பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் மற்றும் அவரது மகன் மருத்துவ சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tags :