Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா வார்டுகளாக மாறிய ரயில் பெட்டிகளை பயன்படுத்த தொடங்கியுள்ள மாநிலங்கள்

கொரோனா வார்டுகளாக மாறிய ரயில் பெட்டிகளை பயன்படுத்த தொடங்கியுள்ள மாநிலங்கள்

By: Nagaraj Tue, 16 June 2020 7:00:58 PM

கொரோனா வார்டுகளாக மாறிய ரயில் பெட்டிகளை பயன்படுத்த தொடங்கியுள்ள மாநிலங்கள்

கொரோனா வார்டுகளாக மாறிய ரயில் பெட்டிகளை சில மாநிலங்கள் பயன்படுத்த தொடங்கி உள்ளன என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ரயில் பெட்டிகளை கொரோனா வார்டுகளாக மாற்றி பல மாதங்கள் ஆன நிலையில் தற்போதுதான் பயன்பாடு தொடங்கி உள்ளது.

டெல்லியில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனை படுக்கைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது. இதை அடுத்து 54 ரயில் பெட்டிகள் இப்போது கொரோனா சிகிச்சைக்கு டெல்லி அரசால் பயன்படுத்தப்படுகிறது.


corona,train box,treatment,states ,கொரோனா, ரயில் பெட்டி, சிகிச்சை, மாநிலங்கள்

உத்தர பிரதேச மாநிலத்தில் 70 ரயில் பெட்டிகளும், தெலங்கானாவில் 60 ரயில் பெட்டிகளும் மாநில அரசுகளால் பயன்படுத்தப்படுகின்றன.

4 மாநிலங்களில் இதுவரை 204 ரயில் பெட்டிகள் கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுவதாகவும், குறுகிய காலத்திற்குள் மேலும் 5000 பெட்டிகளை வழங்கத் தயார் என்றும் ரயில்வே அறிவித்துள்ளது. ஒவ்வொரு ரயில் பெட்டியையும் கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற 67000 ரூபாய் செலவிடப்படுகிறது.

Tags :
|