Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்

உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்

By: vaithegi Thu, 24 Nov 2022 08:53:45 AM

உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்

சீனா: கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம் ..... சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா வைரசானது கண்டறியப்பட்டது. அதன்பின், கொரோனா வைரஸ் 225-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மிக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து, ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு பல்வேறு நாடுகளில் அதை கட்டுப்படுத்தும் பணிகள் நடந்தன.

இதன்பின், கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக தீவிரமடைந்தன. இருப்பினும், வைரசானது, உருமாற்றமடைந்து பாதிப்பு உயந்து கொண்டே வருகிறது. சமீப நாட்களாகவே சீனா, கொரியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து காணப்படுகிறது.

corona,worldwide ,கொரோனா ,உலகளவில்

இதனை அடுத்து இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 கோடியே 43 லட்சத்து 20 ஆயிரத்து 617 ஆக அதிகரித்து உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 62 கோடியே 31 லட்சத்து 35 ஆயிரத்து 320 ஆக உயர்ந்து உள்ளது. இருப்பினும், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66.30 லட்சம் ஆக உயர்ந்து உள்ளது.

Tags :
|