Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் நிலவரம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் நிலவரம்

By: vaithegi Fri, 24 Feb 2023 10:44:45 AM

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் நிலவரம்

இந்தியா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67.93 கோடியாக உள்ளது.

இதையடுத்து இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

corona,india,number ,கொரோனா,இந்தியா,எண்ணிக்கை

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2016 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை மட்டும் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,764 ஆக உள்ளது.

இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,52,839 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 220,63,68,129 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 7,351 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.


Tags :
|
|