அரசுப் பள்ளிகளில் பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் அதிகரிக்க நடவடிக்கை
By: vaithegi Sat, 02 Dec 2023 3:42:03 PM
சென்னை: அரசுப் பள்ளிகளில் பொதுத்தேர்வு தேர்ச்சியை அதிகரிக்க அனைத்து நடவடிக்கைகளும் கல்வித்துறை மேற்கொள்ள வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவிப்பு ... தமிழகத்தில் வருகிற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் அரசுப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பில் காலாண்டு தேர்வில் தேர்ச்சி பற்றிய ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
இதையடுத்து இந்த கூட்டத்திற்கு சிஇஓ கார்த்திகா முன்னிலை வகித்தார். மேலும் டி.இ.ஓ.,க்கள் சாய் சுப்புலட்சுமி, முத்துலட்சுமி, மாநகராட்சி கல்வி அதிகாரி மாரிமுத்து, அரசு உயர், மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில் காலாண்டு தேர்வில் 10 சதவீதம் அரசு பள்ளிகளே 70 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி பெற்றிருந்தது பற்றி மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் 50 சதவீதம் பள்ளிகளின் காலாண்டு தேர்ச்சி விகிதம் 50 சதவீதத்திற்கு கீழ் இருந்தது. அதனால் மாவட்ட ஆட்சியர் பொதுத்தேர்வு தேர்ச்சியை அதிகரிக்க அனைத்து நடவடிக்கைகளும் கல்வித்துறை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
அதில் எதாவது பிரச்சனை இருந்தால் என் கவனத்திற்கு கொண்டு எனவும், மாநில அளவில் மதுரை 10 ஆம் வகுப்பில் 20வது இடத்திலும், 12 ஆம் வகுப்பில் 18 வது இடத்திலும் இருக்கிறது. இந்த ஆண்டு மீண்டும் முதல் 3 இடங்களுக்கு வர வேண்டும் என அவர் தெரிவித்து உள்ளார்.