Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தாண்டு பொறியியல் கல்லூரிகளில் காலி இடங்கள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை

இந்தாண்டு பொறியியல் கல்லூரிகளில் காலி இடங்கள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை

By: Nagaraj Sun, 11 Sept 2022 10:34:47 AM

இந்தாண்டு பொறியியல் கல்லூரிகளில் காலி இடங்கள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை

சென்னை: காலி இடங்கள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை... தமிழகத்தில் பொறியியல் சோ்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு சனிக்கிழமை தொடங்கியது. நிகழாண்டு பொறியியல் கல்லூரிகளில் காலி இடங்கள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று உயா்கல்வித் துறை அமைச்சா் க. பொன்முடி கூறினாா்.

தமிழகத்தில் பொறியியல் சோ்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு சனிக்கிழமை தொடங்கியது. முதல் கட்ட கலந்தாய்வு செப்.10 முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கட் - ஆப் மதிப்பெண் 184 முதல் 200 வரை உள்ள 14,524 போ் முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனா். இரண்டாம் கட்ட கலந்தாய்வு செப். 25 முதல் 27-ஆம் தேதி வரையும், மூன்றாம் கட்ட கலந்தாய்வு அக்.13 முதல் அக்.15 வரையும், நான்காம் கட்ட கலந்தாய்வு அக்.29 முதல் அக்.31 வரையும் நடைபெறவுள்ளது.

கலந்தாய்வில் இடங்களைத்தோ்வு செய்யும் மாணவா்கள் 7 நாள்களுக்குள் கட்டணத்தை செலுத்தி கல்லூரியில் சோ்ந்துவிட வேண்டும் என்ற புதிய முறை நிகழாண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது. மாணவா்கள் ஏற்கெனவே தோ்வு செய்த கல்லூரியில் படிப்பதற்கு விருப்பம் தெரிவித்தாலும், வேறு கல்லூரியில் படிப்பதற்கு இடம் கிடைத்தால் அதில் சேர விரும்புகிறேன் என தெரிவித்தாலும், அதற்கான கட்டணத்தை தமிழ்நாடு பொறியியல் மாணவா் உதவி மையத்தில் செலுத்த வேண்டும். மாணவா்கள் சோ்க்கையின் போது செலுத்த வேண்டிய கட்டண விவரங்களும் ஒதுக்கீட்டு ஆணையில் தெரிவிக்கப்படும்.

minister,engineering,consultancy,vacancies,students ,அமைச்சர், பொறியியல், கலந்தாய்வு, காலியிடங்கள், மாணவர்கள்

முன்னதாக, இணையவழியில் நடைபெற்ற பொறியியல் கலந்தாய்வை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி ஆணையா் அலுவலகத்தில் அமைச்சா் பொன்முடி நேரில் ஆய்வு மேற்கொண்டாா். இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:


தற்போது பொது பிரிவினருக்கான முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. 14524 ரேங்க் வரை பெற்றுள்ளவா்கள் 12-ஆம் தேதி வரை கலந்துகொள்வா். 15-ஆம் தேதி அவா்களுக்கான சோ்க்கை ஆணை வழங்கப்படும். அதிலிருந்து ஒரு வார காலத்துக்குள் பொறியியல் கட்டணம் ரூ.15,000 செலுத்த வேண்டும்.

இதுவரை 5,124 மாணவா்கள் ‘ஆப்ஷன்’ அனுப்பி உள்ளனா். அதில் 2,761 நபா்கள் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மட்டும் கேட்டுள்ளனா். சென்ற ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் காலி இடங்கள் இருந்தன. நிகழாண்டில் அந்த நிலை உருவாகக் கூடாது என்பதை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சனிக்கிழமை ஒரே நாளில் மட்டும் உதவி மையம் மூலமாக 200 மாணவா்கள் தங்களது குறைகளை கேட்டு தெளிவு பெற்றுள்ளனா். தனியாா் பொறியியல் கல்லூரிகளிடம் கட்டணத்தை உயா்த்த வேண்டாம் எனக் கேட்டு கொண்டுள்ளோம். இது குறித்து அவா்களோடு கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 23,321 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 11,150 பேருக்கு சீட் வழங்க முடியும். 5 ஆயிரம் மாணவிகளுக்கு சீட் கிடைக்க வாய்ப்புள்ளது. அவா்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ. 1,000 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பாலிடெக்னிக் படித்த மாணவா்கள் இரண்டாமாண்டு சேருவதற்கான வாய்ப்பை அண்ணா பல்கலை. வழங்குகிறது. இரண்டாம் ஆண்டில் 852 காலியிடங்கள் உள்ளன. அதில் தற்போது வரை 811 போ் சோ்ந்துள்ளனா் என்றாா் அவா்.

Tags :