Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குரூப் 4 ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

குரூப் 4 ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

By: vaithegi Thu, 14 July 2022 3:55:25 PM

குரூப் 4 ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 போட்டி தேர்வானது ஜூலை 24ம் தேதியன்று நடைபெற இருக்கிறது. இத்தேர்வுக்கு இதுவரை மட்டும் 21 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்துள்ளதால்

அதன்படி தேர்வு நடைபெறுவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் இன்று (குரூப் 4) போட்டித்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இப்போது தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை பெற்று கொள்ளலாம். அந்த வகையில் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை இணையத்தளத்தில் இருந்து எப்படி பதிவிறக்கம் செய்யலாம் என்ற விவரங்களை பார்ப்போம்.

instructions,download,group 4 ,வழிமுறைகள் ,பதிவிறக்கம் ,குரூப் 4

முதலில் https://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை திறக்கவும்.
அதன் முகப்பு பக்கத்தில் உள்ள Hall Ticket Download என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
இப்போது திறக்கும் புதிய பக்கத்தில் நிரந்தர பதிவு விவரங்கள் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் உங்கள் பயனர் ஐடி மற்றும் கடவுசொல் ஆகியவற்றை உள்ளிட்டு, கேப்சா குறியீட்டை பிழை இல்லாமல் கொடுக்கவும்.

அடுத்ததாக டேஷ்போர்டில் உங்களது விண்ணப்ப விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
அதில் குரூப் 4 தேர்வுக்கு நேராக ஹால் டிக்கெட் டவுன்லோட் என்று இருக்கும்.
அதை கிளிக் செய்து விண்ணப்ப எண்ணை கொண்டு உள்நுழையவும்.
இப்போது திரையில் தோன்றும் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Tags :