Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தொழில்துறை இயல்பு நிலைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தொழில்துறை இயல்பு நிலைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

By: Monisha Sat, 06 June 2020 1:44:24 PM

தொழில்துறை இயல்பு நிலைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கொரோனா பரவல் காரணமாக அனைத்து நாடுகளிலும் உயிரிழப்பு மட்டுமின்றி பொருளாதார இழப்பும் பெருமளவில் அதிகரித்து வருகிறது. பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சியை மீட்பது குறித்து இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் ‘ஒளிரும் தமிழ்நாடு’ என்ற தலைப்பில் காணொலி வாயிலாக இன்று மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து, தமிழ்நாட்டின் தொழில்வளம் பற்றிய கையேட்டை வெளியிட்டார்.

corona virus,industrial,economic loss,cm edapadi palanisamy ,கொரோனா வைரஸ்,தொழில்துறை,பொருளாதார இழப்பு,முதல்வர் எடப்பாடி பழனிசாமி

பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- கொரோனாவால் வாழ்க்கை முறை மாறியிருக்கிறது. இயல்பு நிலையை நோக்கி தமிழகம் முன்னேறுகிறது. தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. தமிழக தொழிலாளர்களை பயன்படுத்தி தொழில்துறை இயல்பு நிலைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும். 25 சதவீத பணியாளர்களுடன் செயல்பட நிறுவனங்களுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. பணியாளர்கள் உடல் நலம், பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் சூழ்நிலையைப் பொருத்து மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்படும். சென்னையில் பாதிப்பு அதிகமாக இருப்பதால் தளர்வுகள் கூடுதலாக அறிவிக்கப்படவில்லை. இவ்வாறு முதல்வர் பேசினார்.

Tags :