Advertisement

பெண் ஒருவரை சுட்டுக் கொன்ற 10 வயது சிறுமியால் பரபரப்பு

By: Nagaraj Fri, 10 June 2022 1:39:21 PM

பெண் ஒருவரை சுட்டுக் கொன்ற 10 வயது சிறுமியால் பரபரப்பு

அமெரிக்கா: அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்... அமெரிக்காவில் 10 வயதான சிறுமி ஒருவர் பெண்ணொருவரை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் சுட்டுக்கொன்றதாக கூறப்படும் 10 வயதான சிறுமியை அமெரிக்காவின் ஒர்லாண்டோ நகர பொலிஸார் கைது செய்துள்ளனர். தனது தாயாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்ணொருவரை சிறுமி சுட்டுக்கொன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

florida,indictment,shooting,girl,judiciary,authorities ,புளோரிடா, குற்றச்சாட்டு, துப்பாக்கிச்சூடு, சிறுமி, நீதித்துறை, அதிகாரிகள்

சம்பவத்தில் 41 வயதான பெண்ணொருவரே உயிர் இழந்துள்ளார். புளோரிடா மாநிலத்தின் ஒர்லாண்டோ நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் சந்தேகநபரான சிறுமி மீது இன்னும் வழக்கு பதிவுசெய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், சிறுமியின் தாயாரும் தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாக ஒர்லாண்டோ நகர பொலிஸார் தெரிவித்துள்னர். மேலும் சம்பவம் தொடர்பில் சிறுமியின் வயது. சூழ்நிலைகள், உட்பட அனைத்து விடயங்களும் ஆராயப்பட்ட பின்னர், குற்றச்சாட்டு பதிவுசெய்து குறித்து தீர்மானிக்கப்படும் என புளோரிடா மாநில நீதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
|