Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குளத்தை காணவில்லை என்று ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

குளத்தை காணவில்லை என்று ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

By: Nagaraj Sun, 06 Sept 2020 6:58:50 PM

குளத்தை காணவில்லை என்று ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

குளத்தை காணவில்லை... திருவாரூர் நகராட்சி பகுதியில் 74 குளங்கள் உள்ளதாகவும், அவற்றில் ஏராளமான குளங்களில் பெரும்பாலான பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் கூறப்படுகிறது.

இது தொடர்பாக விவசாயிகள் பலர் புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் கூறப்படுகிறது. இந்நிலையில் திருவாரூர் நகராட்சி 25-வது வார்டு பகுதியில் பயன்பாட்டில் இருந்த செட்டிகுளத்தை காணவில்லை என்ற போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

poster,agitation,thiruvarur,people,municipal officials ,போஸ்டர், பரபரப்பு, திருவாரூர், மக்கள், நகராட்சி அதிகாரிகள்

காணாமல் போன குளத்தை மீட்டெடுக்க அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி மீண்டும் திருவாரூர் நகர் பகுதிகளில் 'குளத்தை காணவில்லை' என்ற தலைப்பில் போஸ்டர் அடித்து அந்த பகுதி மக்கள் ஒட்டியுள்ளனர்.

கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் செட்டிகுளம் இருந்து வந்தது. இதன் மூலமாக இந்த பகுதி மக்கள் குளிப்பதற்கு மட்டுமன்றி குடிநீர் தேவைக்கும் இந்த குளத்தை பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த குளம் ஆக்கிரமிக்கப்பட்டு முழுவதுமாக பொது பாதையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உடனடியாக நகராட்சி அதிகாரிகள் மீண்டும் அந்த இடத்தில் குளத்தை உருவாக்கி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் நகரில் குளத்தை காணவில்லை என போஸ்டர் ஒட்டிய சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags :
|
|