Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருடப்பட்ட செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

திருடப்பட்ட செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

By: Nagaraj Mon, 23 Jan 2023 09:39:58 AM

திருடப்பட்ட செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

தஞ்சாவூர்: திருடப்பட்ட செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் தஞ்சை போலீசார் வழங்கினர்.

தஞ்சை பழைய பஸ் நிலையம், ரெயில் நிலையம், ராசா மிராசுதாரர் மருத்துவமனை உள்பட மேற்கு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் காணாமல் போன செல்போன்கள் கண்டுபிடிக்க சம்பந்தப்பட்ட பொதுமக்கள் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதையடுத்து நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் , ஏட்டு செந்தில் குமார் மற்றும் போலீசார் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிக்கும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மாயமான செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ நம்பர் மூலம் தேடும் பணியை தொடங்கினர். மேலும் பல்வேறு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும் செல்போனை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர். அப்போது சம்பந்தப்பட்ட செல்போன்கள் ஈரோடு, நாமக்கல், சென்னை உள்ளிட்ட இடங்களில் சிலர் ஏற்கனவே கடைகளில் வாங்கி பயன்படுத்தியது தெரியவந்தது.

security,cell phones,rescue,stolen,thanjavur ,பாதுகாப்பு, செல்போன்கள், மீட்பு, திருட்டு போனது, தஞ்சை

இதையடுத்து அந்த நபர்களிடம் செல்போன்களை போலீசார் மீட்டனர். மேலும் சில செல்போன்கள் தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தில் சில இடங்களில் உள்ள கடைகளில் விற்கப்பட்டதும் தெரியவந்தது. அதனை ஐ.எம்.இ.ஐ நம்பர் மூலம் உறுதிப்படுத்திய பிறகு போலீசார் மீட்டனர்.

சில செல்போன்களை கீழே கிடந்ததாக பொதுமக்கள் சிலர் போலீசிடம் ஒப்படைத்தனர். இவ்வாறாக பொதுமக்களால் தவறவிட்டு, புகார் பெற்று ரூ.5 லட்சம் மதிப்புள்ள 45 செல்போன்களை போலீசார் கண்டுபிடித்து மீட்டனர். இன்று அந்த செல்போன்களை உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

இன்ஸ்பெக்டர் சந்திரா முன்னிலையில் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா சம்பந்தப்பட்டவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார். அப்போது அவர், கஷ்டப்பட்டு செல்போன்கள் வாங்குகிறீர்கள். அதனை சரியான முறையில் பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினார்.

Tags :
|
|