Advertisement

வயிறு மட்டும் இருபது கிலோ; எதனால் என்று தெரியலையே!

By: Nagaraj Fri, 07 Aug 2020 2:32:28 PM

வயிறு மட்டும் இருபது கிலோ; எதனால் என்று தெரியலையே!

சீன பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள விநோத பிரச்னை... சீனாவை சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு கடந்த 2 வருடங்களாக வயிறு வீக்கம் அடைந்துக்கொண்டே போகும் விநோத பிரச்னை எழுந்துள்ளது.

சீனாவின் அனுஷுன் நகரை சேர்ந்தவர் 35 வயது பெண்மணி ஹுவாங் காஷியங். 2 குழந்தைகளுக்கு தாயான இவர் கடந்த இரண்டு வருடமாக வயிறு வீங்கிக்கொண்டே போகும் விநோத பிரச்னை ஒன்றை சந்தித்து வருகிறார். அதாவது, இவரது எடை தற்போது 121 பவுண்டாக ( சுமார் 54 கிலோ) இருக்கிறது.

இதில் அவரது வயிறு மட்டுமே 44 பவுண்ட் (சுமார் 20 கிலோ) எடைக்கொண்டதாக இருக்கிறது. இது அவரது மொத்த எடையில் 36 சதவீதம் ஆகும். தொடக்கத்தில் சிறிய பிரச்னை என்று கருதிய ஹுவாங்கிற்கு காலப்போக்கில் வயிறு பெரிதாகி வலிகள் ஏற்பட ஆரமித்துள்ளது. இதனையடுத்து ஹுவாங் மருத்துவ உதவியை நாடியுள்ளார்.

woman,bizarre problem,abdominal pain,cause ,பெண்மணி, விநோத பிரச்னை, வயிறு வலி, காரணம்

மருத்துவர்கள், அவருக்கு வலியை குறைப்பதற்கு மருந்துகளை தந்துள்ளனர். மருந்துகளின் மூலம் வயிறு வலி குறைந்த போதிலும், அவரது வயிற்று பகுதி வீக்கமடைவது மட்டும் குறைவில்லை. அவரது இந்த பிரச்னை குறித்து பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு கல்லீரல் நோய், கருப்பை புற்றுநோய், உடலில் கட்டி உருவாகுதல், அடிவயிறு மற்றும் மார்பு பகுதி ஆகியவற்றில் தேவையற்ற திரவம் உருவாகுதல் உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பதைக் கண்டறிந்தனர்.

ஆனால், அவர்களால் ஹுவாங்கின் வயிறு ஏன் பெரிதாகிக் கொண்டே போகின்றது என்பதற்கான காரணத்தை மட்டும் கண்டறிய முடியவில்லை. இது குறித்து ஹுவாங் கூறுகையில், "இந்த வயிறு வீக்கம் எனது வாழ்வில் மிகப்பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. எனது வயிறு இப்படி வீங்கி இருப்பதால் என்னால் நிம்மதியாக தூங்கக் கூட முடியவில்லை. எனது இரு குழந்தைகளை கவனிப்பது சிரமமாக உள்ளது. அதனால் எனது குழந்தைகளை அவரது தாத்தாவும் பாட்டியும் கவனித்துக் கொள்கிறார்கள். நான் சீக்கிரம் இந்த நோயிலிருந்து வெளிவந்து விடுவேன் என்று நம்புகிறேன்" என்றார்.

ஹுவாங்கின் பிரச்னையை அறிந்த பலர் அவரின் மருத்துவ செலவிற்கு உதவ முன்வந்துள்ளனர். இதுவரை அவருக்கு சுமார் ரூ.3,23,000 உதவியாக கிடைத்துள்ளது.

Tags :
|