Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உங்கள் ஜனாதிபதியை தடுத்து நிறுத்துங்கள்... ரஷ்ய மக்களுக்கு உக்ரைன் ஜனாதிபதி வலியுறுத்தல்

உங்கள் ஜனாதிபதியை தடுத்து நிறுத்துங்கள்... ரஷ்ய மக்களுக்கு உக்ரைன் ஜனாதிபதி வலியுறுத்தல்

By: Nagaraj Sat, 01 Oct 2022 10:37:22 AM

உங்கள் ஜனாதிபதியை தடுத்து நிறுத்துங்கள்... ரஷ்ய மக்களுக்கு உக்ரைன் ஜனாதிபதி வலியுறுத்தல்

உக்ரைன்: ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு உக்ரைனிய பகுதிகளில் ரஷ்ய அதிகாரிகளால் நடத்தப்பட்ட வாக்கெடுப்பினை தொடர்ந்து, சுதந்திர பகுதிகளாக அறிவிக்கப்பட்டு இருந்த கெர்சன், லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் மற்றும் Zaporizhzhia ஆகிய நான்கு பகுதிகளும் ரஷ்யாவுடன் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட ரஷ்யாவின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், மக்கள் விருப்பம் தெரிவித்துள்ள நான்கு நகரங்களையும் ரஷ்யாவுடன் இணைக்கும் கிரெம்ளின் இணைப்பு விழாவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கலந்து கொள்வார் என அறிவித்தார்.

russia,action,condemnation,ukraine president,plea,officials ,
ரஷ்யா, நடவடிக்கை, கண்டனம், உக்ரைன் அதிபர், வேண்டுகோள், அதிகாரிகள்

ரஷ்யாவுடன் இணையவிருக்கும் பிராந்தியத்தின் மாஸ்கோ சார்பு நிர்வாகிகள் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என்றும் தெரிவித்தார். ரஷ்யாவின் இத்தகைய அத்துமீறிய செயலை கடுமையாக கண்டித்துள்ள உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ரஷ்ய மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்துள்ளார்.

அதில் உங்களுடைய உயிரை விட போரை முக்கியமானதாக கருதும் ஒருவரை( புடினை) ரஷ்யர்கள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிகாரிகளால் நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில் அப்பகுதிகளில் உள்ள குடியிருப்பாளர்கள் பங்கேற்றனர், இருப்பினும் ரஷ்யாவின் நடவடிக்கைக்கு மேற்கத்திய அரசாங்கங்களால் பரவலாக கண்டிக்கப்பட்டது

Tags :
|
|
|