Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிகரித்த கொரோனாவால் கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா கட்டுப்பாடுகளை அங்காடி நிர்வாக குழு தீவிரம்

அதிகரித்த கொரோனாவால் கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா கட்டுப்பாடுகளை அங்காடி நிர்வாக குழு தீவிரம்

By: vaithegi Wed, 22 June 2022 4:19:44 PM

அதிகரித்த கொரோனாவால் கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா கட்டுப்பாடுகளை அங்காடி நிர்வாக குழு தீவிரம்


சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

அத்துடன் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தொற்று அதிகம் ஏற்படும் பகுதிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சென்னையில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து தற்போது சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி, பழம், பூ மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட 4000 கடைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் இங்கு ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லாரிகள் மற்றும் மினி வேன்கள் வந்து செல்கின்றன.

corona,spread of infection,precaution ,கொரோனா ,தொற்று பரவல் ,முன்னெச்சரிக்கை

அதனால் கொரோனா கால கட்டத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த கோயம்பேடு மார்க்கெட் தற்காலிகமாக மூடப்பட்டது. இதையடுத்து கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து படிப்படியாக தளர்வு அளிக்கப்பட்டு கோயம்பேடு மார்க்கெட் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. அதனால் கோயம்பேடு மார்க்கெட்டில் கட்டுப்பாடுகள் குறித்து அங்காடி நிர்வாக குழு அதிகாரி தெரிவித்துள்ளதாவது, மார்க்கெட் வளாகத்தில் முகக்கவசம் அணிவது, கடை முன்பு சானிடைசர் வைப்பது, சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.

இதனை மீறி செயல்படும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கடந்த வாரம் முதல் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

Tags :
|