Advertisement

மக்களை அச்சுறுத்தி வந்த மாண்டஸ் புயல் கரையை கடந்தது

By: vaithegi Sat, 10 Dec 2022 09:59:27 AM

மக்களை அச்சுறுத்தி வந்த மாண்டஸ் புயல் கரையை கடந்தது

சென்னை : சென்னை மக்களை அச்சுறுத்தி வந்த மாண்டஸ் புயலின் மையப்பகுதி இரவு 2.30 மணி அளவில் கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இதனை அடுத்து இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் அவர்கள், "மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்தது. மாண்டஸ் புயல் தொடர்ந்து வலுவிழந்து வருகிறது.

இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, மதியம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும். வட உள் மாவட்டங்களின் வழியே கடந்து செல்லும். சென்னையில் இருந்து தற்போது 30 கி.மீட்டர் தெற்கு-தென் கிழக்கே மாண்டஸ் புயல் நகர்ந்து வருகிறது. s

mandus storm,chennai ,மாண்டஸ் புயல்,சென்னை

புயலின் பின்பகுதி இன்னும் 1 மணி நேரத்தில் முழுமையாக கரையை கடக்கும்" என அவர் தெரிவித்தார். புயல் கரையை கடந்துள்ளதால் பல இடங்களில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து கொண்டு வருகிறது. இதற்கு இடையே சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றால் மின்சார கம்பங்கள் ஆங்காங்கே சாய்ந்தன.

சென்னையில் பல பகுதிகளில் சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மரங்கள் சாலைகளின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது

Tags :