Advertisement

புயல் எச்சரிக்கை ... மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

By: vaithegi Tue, 06 Dec 2022 11:26:43 AM

புயல் எச்சரிக்கை   ...  மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

சென்னை : வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதனை தொடர்ந்து தற்போது வருகிற 8 ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து இந்த புயலிற்கு மண்டாஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நேற்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய உள்ளது. இது புயலாக மாற வாய்ப்புள்ளது.

fishermen,storm ,மீனவர்கள் ,புயல்

அதனால் நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அது மட்டுமில்லாமல் புயல் எச்சரிக்கை காரணமாக நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், சென்னை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படை இன்று சென்றுள்ளது. புயல் எச்சரிக்கையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :