Advertisement

புதுவையில் புயல் எச்சரிக்கை

By: vaithegi Thu, 08 Dec 2022 3:55:23 PM

புதுவையில் புயல் எச்சரிக்கை

புதுச்சேரி: கடந்த வாரம் வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இப்புயலுக்கு மாண்டாஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த புயலின் காரணமாக தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தின் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.அதை தொடர்ந்து புதுவையில் புயல் சின்னம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

warning,storm,puducherry ,எச்சரிக்கை ,புயல் ,புதுச்சேரி

இதையடுத்து புதுச்சேரியில் மீட்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இப்புயலால் கன மழையுடன் காற்று 85 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் புதுச்சேரியில் பேனர்கள், பிளக்ஸ்கள், கட் அவுட் ஆகியவை வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது உள்ள பேனர்களை உடனடியாக அகற்றவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையான உணவு பொருட்களை மக்கள் அனைவரும் இப்போதே வாங்கி வைத்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டள்ளது. இந்த மாண்டாஸ் புயல் நாளை புதுச்சேரி, ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Tags :
|