கடும் நடவடிக்கை... கோவை காவல் ஆணையர் எச்சரிக்கை
By: Nagaraj Tue, 10 Oct 2023 06:46:55 AM
கோவை: காவல் ஆணையர் எச்சரிக்கை... பாலியல் குற்றங்களை மறைப்பவர்கள் மீது நடவடிக்கை பாயும் என கோவை மாநகர காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.
மாணவ, மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க பள்ளி நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதே சமயம், பாலியல் குற்றங்களை மறைக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையர் கூறியுள்ளார்.
கோவை மாநகர காவல்துறை மற்றும் தனியார் அமைப்பு இணைந்து நடத்திய போதைப் பொருட்களுக்கு எதிரான டிஜிட்டல் கையெழுத்து இயக்கத்தை பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
Tags :
digital |