Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாஸ்க் இல்லாமல் பயணம் செய்தால் கடும் நடவடிக்கை; விமான நிறுவனம் அறிவிப்பு

மாஸ்க் இல்லாமல் பயணம் செய்தால் கடும் நடவடிக்கை; விமான நிறுவனம் அறிவிப்பு

By: Nagaraj Sat, 29 Aug 2020 08:04:20 AM

மாஸ்க் இல்லாமல் பயணம் செய்தால் கடும் நடவடிக்கை; விமான நிறுவனம் அறிவிப்பு

கடும் நடவடிக்கை எடுக்கப்படும்... செப்டம்பர் 1 முதல் தனது நிறுவன விமானங்களில் மாஸ்க் இன்றி பயணிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளது கனேடிய விமான நிறுவனம் ஒன்று.

கனேடிய விமான நிறுவனமான WestJet அறிவித்துள்ள தண்டனை உண்மையாகவே சற்று தீவிரமானதுதான். விமானத்தில் மாஸ்க் இன்றி பிடிபடுவோர் உடனடியாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட இருப்பதோடு, ஓராண்டுக்கு அவர்கள் WestJet நிறுவன விமானங்களில் பயணிப்பதற்கு தடையும் விதிக்கப்படும்.

சற்று விளக்கமாக சொன்னால், விமானப் பயணிகள் மாஸ்க் அணியாமல் அமர்ந்திருந்தால், விமான ஊழியர்கள் அவர்களை மாஸ்க் அணியும்படி கேட்டுக்கொள்வார்கள். அவர்கள் மறுத்தால், மாஸ்க் அணிவது அவசியம் என அதிகாரப்பூர்வமாக அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும்.

camel stitching,action,airline,mask,passengers ,செம கண்டிப்பு, நடவடிக்கை, விமான நிறுவனம், மாஸ்க், பயணிகள்

அப்படியும் அவர்கள் மாஸ்க் அணிய மறுக்கும் பட்சத்தில், விமானம் புறப்படவில்லையானால், உடனடியாக அவர்கள் வெளியேற்றப்படுவார்கள். சில நேரங்களில் நிலைமை கைமீறிப் போனால், தொடர்ந்து பயணி மாஸ்க் அணிய மறுத்தால், விமானம் புறப்பட்ட இடத்துக்குக்கே திருப்பப்பட்டு அவர் விமானத்திலிருந்து இறக்கிவிடப்படுவார்.

அப்படியும் மாஸ்க் அணிய மறுக்கும் பயணிகளுக்கு WestJet நிறுவன விமானங்களில் பயணிப்பதற்கு ஓராண்டு வரை தடை விதிக்கப்படும். அத்துடன், செப்டம்பர் 1 முதல் WestJet நிறுவன விமானங்களில் பயணிப்போர், தங்கள் முகவரி முதலான விவரங்களையும் கட்டாயம் தெரிவிக்கவேண்டும்.

விமானத்தில் பயணிக்கும் யாருக்காவது கொரோனா தொற்று இருப்பதாக தெரியவந்தால், அவர்களை எளிதில் சுகாதார அதிகாரிகள் கண்டுபிடிப்பதற்கு வசதியாக இருக்கும் என்பதால், இந்த நடவடிக்கைக்கு யாருக்கும் விதிவிலக்கு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|