Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரேஷன் கடைகளில் வாங்காத பொருட்களுக்கும் பில் போடும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

ரேஷன் கடைகளில் வாங்காத பொருட்களுக்கும் பில் போடும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

By: vaithegi Sat, 29 Apr 2023 3:17:50 PM

ரேஷன் கடைகளில் வாங்காத பொருட்களுக்கும் பில் போடும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

சென்னை : தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளின் வாயிலாக பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகிய அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், தமிழகத்தில் உள்ள பல ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு முறையான ரேஷன் பொருட்களை வழங்காமல் கள்ளச் சந்தையில் விற்பனை செய்வது, பொருளின் அளவை குறைத்து வழங்குவது, தரமற்ற பொருட்களை வழங்குவது போன்ற முறைகேடுகள் நடைபெற்று கொண்டு வருகிறது.

vendors,ration shop ,விற்பனையாளர்கள் ,ரேஷன் கடை


இதனால், ரேஷன் கடைகளில் அவ்வப்போது உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆய்வாளர்கள் தரமான பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படுகிறதா என்றும், ரேஷன் பொருட்கள் திருடப்படுகிறதா என்றும் ஆய்வு செய்து கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ரேஷன் கடைகளில் பொதுமக்கள் வாங்காத பொருட்களுக்கும் சேர்த்து பில் போடுவதாக விற்பனையாளர்கள் மீது தற்போது புகார் எழுந்திருக்கிறது. இதை அடுத்து கூட்டுறவுத்துறை பதிவாளர் ரேஷன் கடைகளில் வாங்காத பொருட்களுக்கு பில் போட்டால் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின்கீழ் அந்த விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Tags :