Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீபாவளியன்று அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு மேல் பட்டாசு வெடித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

தீபாவளியன்று அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு மேல் பட்டாசு வெடித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

By: vaithegi Thu, 20 Oct 2022 4:36:24 PM

தீபாவளியன்று அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு மேல் பட்டாசு வெடித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

சென்னை :அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு மேல் பட்டாசு வெடித்தால், கடும் நடவடிக்கை ...... வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை), தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு பல கடுப்பாடுகளை அறிவித்து வருகிறது. இதையடுத்து இந்த நிலையில் கடந்த சில வருடங்களாகவே 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று இந்த ஆண்டும் இதே செயல் முறையை அரசு செயல் படுத்த உள்ளது. அதாவது, தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

fireworks,diwali ,பட்டாசு ,தீபாவளி

மேலும் அது மட்டும் அல்லாமல், சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு விதி 89-ன்படி பட்டாசு வெடிக்கும் இடத்தில் இருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது. மேலும் தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ, பயன்படுத்துவதோ கூடாது என பல தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை மாநகர காவல்‌ ஆணையர்‌ ஒரு முக்கிய எச்சரிக்கையை மக்களுக்கு விடுத்துள்ளார். அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல்‌ நேரத்தில்‌ பட்டாசு வெடித்தால்‌ நடவடிக்கைகள்‌ எடுப்போம்‌ எனவும், பட்டாசு விற்பனையாளர்கள்‌ அனுமதிக்கப்பட்ட நேரத்தில்‌ மட்டும்‌ பட்டாசுகளை விற்பனை செய்ய வேண்டும்‌ என சென்னை மாநகர காவல்‌ ஆணையர்‌ சங்கர்‌ ஜிவால்‌ அவர்கள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

Tags :