Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா இரண்டாவது அலையால் பிரிட்டனில் கடுமையான கட்டுப்பாடுகள்

கொரோனா இரண்டாவது அலையால் பிரிட்டனில் கடுமையான கட்டுப்பாடுகள்

By: Nagaraj Sun, 20 Dec 2020 7:15:58 PM

கொரோனா இரண்டாவது அலையால் பிரிட்டனில் கடுமையான கட்டுப்பாடுகள்

கொரோனா இரண்டாவது அலையால் பிரிட்டனில் மீண்டும் தீவிரமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக, துவக்கத்தில் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டது. பல மாதங்கள் மக்கள் விழிபிதுங்கிய நிலையில், கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், துவக்கத்தில் கொரோனாவின் தாக்கத்தில் இருந்த நாடுகள், மீண்டும் இரண்டாவது கொரோனா பரவல் அலையில் சிக்கியுள்ளது. பிரிட்டன் நாட்டிலும் கொரோனாவின் இரண்டாவது தாக்கம் ஏற்பட்டுள்ளது.

corona localization,uk,strict control,review ,கொரோனா பரவல், பிரிட்டன், கடும் கட்டுப்பாடு, பரிசீலனை

பிரிட்டனில் பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாத அளவில் உள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக லண்டன் மற்றும் தென்கிழக்கு பிரிட்டன் பகுதியில் கடுமையான ஊரடங்கு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதிய வகை கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உள்ளதால் பிரிட்டன் விமான போக்குவரத்தை நிறுத்த ஜெர்மனி பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. முன்னதாக விமான போக்குவரத்துக்கு தடை விதித்து நெதர்லாந்து உத்தரவிட்ட நிலையில், ஜெர்மனியும் இதுதொடர்பாக பரிசீலனை செய்து வருகிறது.

Tags :
|