Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆப்பிள், கூகுள், மெட்டா நிறுவனங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள்

ஆப்பிள், கூகுள், மெட்டா நிறுவனங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள்

By: Nagaraj Wed, 03 May 2023 11:57:56 AM

ஆப்பிள், கூகுள், மெட்டா நிறுவனங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள்

ஐரோப்பியா: கடுமையான கட்டுப்பாடுகள்… ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சேவை சட்டத்தின் கீழ், ஆப்பிள், கூகுள், மெட்டா உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் இணைய உள்ளடக்க விதிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட்டின் துணை நிறுவனங்கள், மெட்டா நிறுவனத்தின் இரண்டு யூனிட்டுகள், ஆப்பிள் ஆப் ஸ்டோர், அலி எக்ஸ்பிரஸ், ட்விட்டர் மற்றும் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட 19 தளங்களின் பெயர்களைப் பட்டியலிட்டு ஐரோப்பிய ஒன்றியம் அடையாளம் கண்டுள்ளது. இந்த விதிகள் டிஜிட்டல் சேவை சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளடக்க விதிகளின் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, சட்ட விரோதமாக அல்லது பிறருக்கு தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை சமூக ஊடக நிறுவனங்கள் வேகமாக நீக்குவதற்கான புதிய நடைமுறைகளை சேர்க்க வேண்டும். அதேபோல பயனர்களின் உள்ளடக்கத்தை அகற்றும் கொள்கையானது, எப்படி செயல்படுகிறது என்பதையும் விலாவாரியாக நிறுவனங்கள் விளக்க வேண்டும்.

ads,restrictions,data,basic,children ,விளம்பரங்கள், கடும் கட்டுப்பாடு, தரவுகள், அடிப்படை, சிறுவர்கள்

இவை அனைத்தும் ஐரோப்பிய ஆணையத்தின் நேரடி கண்காணிப்பில், இந்த புதிய சட்டத்தின் தேவைகள் மற்றும் அமலாக்கமானது செயல்படுத்தப்படும். இந்த சட்டத்தால், ஆன்லைன் தளங்களில் பயனர்களின் விளம்பரங்களை எளிதாக கண்டுபிடித்து, அதை யார் வழங்குகிறார்கள் அல்லது யார் பணத்தை செலுத்தி இருக்கிறார்கள் என்பதை அறிய முடியும்.

மேலும் சிறுவர்களுக்கு தனிப்பட்ட முறையில் விளம்பரங்களை காட்டக்கூடாது அல்லது ஒருவரின் தனிப்பட்ட தரவுகளின் அடிப்படையில் விளம்பரங்களை அந்த நபருக்கு கொண்டுபோய் சேர்க்கக்கூடாது.

Tags :
|
|
|